Wednesday 1st of May 2024 11:37:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
உலகில் 97 இலட்சம் சிறுவா்கள்  கல்வியை  இடைநிறுத்தும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கை!

உலகில் 97 இலட்சம் சிறுவா்கள் கல்வியை இடைநிறுத்தும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கை!


கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் உலகம் முழுவதும் 160 கோடி சிறுவா்கள் பாடசாலைக்குச் செல்லாமல் உள்ளனா் எனத் தெரிவித்துள்ள பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சேவ் த சில்ரண்ட் தொண்டு நிறுவனம், இவா்களில் 97 இலட்சம் சிறுவா்கள் மீண்டும் பாடசாலைக்குச் செல்லாமல் கல்வியை இடைநிறுத்தும் ஆபத்து உள்ளதாக எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடி முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு உலகில் கல்வி அவசர நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் ஏப்ரல் மாதம் முதல் 160 கோடி இளையவர்கள் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலில் இருந்து வெளியேறியுள்ளனர். இது உலகின் மொத்த மாணவர் தொகையில் 90 சதவீதம் எனவும் யுனெஸ்கோவின் தரவை மேற்கோள் காட்டி சேவ் த சில்ரண்ட் தெரிவித்துள்ளது.

மனித வரலாற்றில் முதல்முறையாக உலகளவில் ஒரு தலைமுறை குழந்தைகளின் கல்வி சீா்குலைந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொற்று நோய் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் 90 முதல் 117 மில்லியன் வரையான சிறுவர்கள் கொடிய வறுமையின் பிடியில் சிக்க நேரிடும். இது அவா்கள் பாடசாலைகளில் மீள இணைவதைத் தடுக்கும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளால் பட்ஜெட்டில் அரசாங்கங்கள் கல்விக்கு ஒதுக்கும் தொகை குறையும். இதனால், ஊரடங்கு முடிந்த பின்பும் குழந்தைகள் பாடசாலைகளுக்குத் திரும்ப முடியாத நெருக்கடியை ஏற்படுத்தும்.

யேமன், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் 12 நாடுகளில் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், 28 நாடுகளில், இந்த ஆபத்து அதிகமாகவோ அல்லது மிதமாகவோ இருக்கும். மொத்தத்தில், உலகம் முழுவதும் 97 இலட்சம் சிறுவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது, முன் எப்போதும் இல்லாத கல்வி நெருக்கடி நிலை எனவும் சேவ் த சில்ரண்ட் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த 18 மாதங்களில், ஏழை நாடுகளில் கல்விக்கு செலவழிக்கும் தொகை 7,700 கோடி டொலர் குறையும். நிதி ஒதுக்கீட்டை குறைப்பதால், ஏழை-பணக்காரர் இடையிலான வேறுபாடு இன்னும் அதிகரிக்கும்.

பாடசாலை மூடியுள்ள காலத்தில், பெண் குழந்தைகள், பாலியல் வன்முறைக்கு உள்ளாவது அதிகரிக்கும். சிறுவர் திருமணங்கள், சிறுவயது கர்ப்பங்கள் ஆகியவையும் உயரும். கல்விக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை போக்க உலக நாடுகளும், நன்கொடையாளர்களும் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் சேவ் த சில்ரண்ட் கோரிக்கை விடுத்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE